ஞாயிறு, 6 நவம்பர், 2016

சுற்றுச்சூழல் மாசுபாடு

வானம் பார்த்த பூமி காய்ந்து போனதென்ன?
மரம்,செடி கொடிகளும் இங்கு அழிந்து கொண்டிருக்கும் மர்மம் என்ன?

மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மலர்வதும் ஏனோ?
எஞ்சியுள்ள சுற்றுச்சூழலை அழித்திட தானோ!

செயற்கை உரங்களை இட்டு நிலத்தின் தரங்களை குறைப்பது ஏனோ?
இயற்கை வளங்களை அழித்திட தானோ!

விளை நிலங்களும் இன்று விலை நிலங்களாய் மாறுவது ஏனோ?
வீண் பட்டினியால் உலகம் அழிந்திடத் தானோ?

இயற்கையை அழிக்க நினைப்பது பாவம்,
நில அதிர்வு, சுனாமி இவையாவும் இயற்கை, மனிதன் மேல் கொண்ட கோவம்!

அழிவு நம்மை நோக்கி வரவில்லை,பேருந்து பயணம் போல நாம்தான் அதனை நோக்கி பயணிக்கிறோம்!

தொழிற்சாலைகளின்
கழிவு நீரை ஆறு, ஏரிகளில் கலப்பதும் ஏனோ?
அழிவை நமக்கு நாமே தேடிக்கொள்ளத் தானோ!

இயந்திரங்கள், தொழிற்சாலைகளின் புகை போதாதென்று
மனிதனும் ஊதித் தள்ளுகிறான் புகையை இன்று!

தற்கொலைப் படையாக தன்னை அழித்துக் கொண்டு
கூலிப் படையாக பிறரையும் அழிப்பது ஏனோ?

நாம் உருவாக்கும் நச்சுப் புகையால்
வானம் துளி நீர் கசியவும் தயங்குகிறது
மாறாக, வறட்சியால் நம் கண்ணில் நீர் கசிகிறது!

அறிவியல் வளர்ச்சியில் ஒன்று அலைபரப்பி,
அதனால் அழியுது சின்னஞ் சிறு குருவி,
பஞ்ச பூதங்களில் நெருப்பைத்(முடியாதென்பதால்) தவிர நான்கையும் நாசமாக்கி(மாசுபடுத்தி) விட்டோம்.

விஞ்ஞானம் என்று இஞ்ஞானத்தை மறந்தோம்!
மெய்ஞானம் இங்கே முற்றிலும் துறந்தோம்!

சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது முறைகேடு.
செயற்கை விளைவிக்கிறது மனிதனுக்கு சீர்கேடு.
பிரிக்கப்பட வேண்டும் குப்பைகளின் வேறுபாடு.
தடுக்கப்பட வேண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு.
இயற்கையுடன் நமக்கு வேண்டாம் இடிபாடு.
அனைவரும் காட்டுவோம் இதில் ஈடுபாடு!

~ surece ~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக