ஞாயிறு, 6 நவம்பர், 2016

அன்பின் வெளிப்பாடு

உன்னை நான் நேசித்தேன்
உன் அன்பை மட்டும் யாசித்தேன்
காதல் பாடம் வாசித்தேன்
உன்னை மூச்சுகாற்றாய் சுவாசித்தேன்
உன்னை ராப்பொழுதும் வர்ணித்தேன்
நானும் உன்னை மன்னித்தேன்!

காரணம்,
என் துயில் போனதுனை எண்ணித்தான், இவ்வளவு அழகாக உனை இறைவன் ஏன் படைத்தான்?
எப்போதும்
ஆசை தூண்டும் உனை கொஞ்சத்தான்
யாரேனும் காண்பரோ என நீயும் அஞ்சத்தான்

நானும் கொஞ்சம் தள்ளித்தான் உனை கூட்டிச்சென்று உன் கன்னம் சிறிது கிள்ளித்தான்
என் மடியில் கொஞ்சம் உன்னை அள்ளித்தான் முழுதாகப் பருக ஏதுவான நீ தேன்தான்
உன்னை பருகும் வண்டு நான்தான்
வண்ண மயில் நீதான்
வான் மழை நான்தான்!

என் வருகைக்கு ஏங்கி
வண்ண மயில் மாது
தோகை விரிக்கும் போது
நான் போவேனோ உனை நீங்கி!!!

~ surece ~

உன்னை மட்டும் எண்ணி

உன்னை மட்டும் எண்ணி ஏங்கும் கண்கள்
அழுதழுது இன்று கண்ணில் நீர் வற்றி காய்ந்துபோய் விட்டது!
உன் இதழ்நீரால் என் இமையை ஈரமாக்கு!
இனாமாக வேண்டாம்.
ஒரு நாள் ஆனந்தக் கண்ணீராக உனக்கு திருப்பித்  தந்து விடுகிறேன்!

~ surece ~

சுற்றுச்சூழல் மாசுபாடு

வானம் பார்த்த பூமி காய்ந்து போனதென்ன?
மரம்,செடி கொடிகளும் இங்கு அழிந்து கொண்டிருக்கும் மர்மம் என்ன?

மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மலர்வதும் ஏனோ?
எஞ்சியுள்ள சுற்றுச்சூழலை அழித்திட தானோ!

செயற்கை உரங்களை இட்டு நிலத்தின் தரங்களை குறைப்பது ஏனோ?
இயற்கை வளங்களை அழித்திட தானோ!

விளை நிலங்களும் இன்று விலை நிலங்களாய் மாறுவது ஏனோ?
வீண் பட்டினியால் உலகம் அழிந்திடத் தானோ?

இயற்கையை அழிக்க நினைப்பது பாவம்,
நில அதிர்வு, சுனாமி இவையாவும் இயற்கை, மனிதன் மேல் கொண்ட கோவம்!

அழிவு நம்மை நோக்கி வரவில்லை,பேருந்து பயணம் போல நாம்தான் அதனை நோக்கி பயணிக்கிறோம்!

தொழிற்சாலைகளின்
கழிவு நீரை ஆறு, ஏரிகளில் கலப்பதும் ஏனோ?
அழிவை நமக்கு நாமே தேடிக்கொள்ளத் தானோ!

இயந்திரங்கள், தொழிற்சாலைகளின் புகை போதாதென்று
மனிதனும் ஊதித் தள்ளுகிறான் புகையை இன்று!

தற்கொலைப் படையாக தன்னை அழித்துக் கொண்டு
கூலிப் படையாக பிறரையும் அழிப்பது ஏனோ?

நாம் உருவாக்கும் நச்சுப் புகையால்
வானம் துளி நீர் கசியவும் தயங்குகிறது
மாறாக, வறட்சியால் நம் கண்ணில் நீர் கசிகிறது!

அறிவியல் வளர்ச்சியில் ஒன்று அலைபரப்பி,
அதனால் அழியுது சின்னஞ் சிறு குருவி,
பஞ்ச பூதங்களில் நெருப்பைத்(முடியாதென்பதால்) தவிர நான்கையும் நாசமாக்கி(மாசுபடுத்தி) விட்டோம்.

விஞ்ஞானம் என்று இஞ்ஞானத்தை மறந்தோம்!
மெய்ஞானம் இங்கே முற்றிலும் துறந்தோம்!

சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது முறைகேடு.
செயற்கை விளைவிக்கிறது மனிதனுக்கு சீர்கேடு.
பிரிக்கப்பட வேண்டும் குப்பைகளின் வேறுபாடு.
தடுக்கப்பட வேண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு.
இயற்கையுடன் நமக்கு வேண்டாம் இடிபாடு.
அனைவரும் காட்டுவோம் இதில் ஈடுபாடு!

~ surece ~

காதலி என்னை காதலி

நீதான் என் காதல் எதிராளியோ!
உன் நினைவுகள் தான் என்னைத் தாக்கும் ஆயுதமோ!

புத்தகத்தை திறந்து புவியியல் படித்தாலும் புத்தியெல்லாம் உன் பக்கம் தான்.
மத்தபடி ஒன்றுமில்லை, உன்மேல் கொண்ட காதல் தான்.

உன் பேரை சொன்னாலே நாவெல்லாம் இனிக்கிறது,
நான் உன் நினைப்பால் கொண்ட உடற்சூடெல்லாம், உன் அணைப்பால் தணியுமடி!

உலகெல்லாம் மறந்து போவேன் உன்னருகே நானிருந்தால், ஆனால் பெண்ணே உன்னை மறந்தால் இறந்து போவேன்!

என்னவோ தெரியல பெண்ணே என் கண்கள் ராவெல்லாம் தூங்கல உன்னால
கண்கள் மூடினாலும் இருளாய் தெரியவில்லை, மாறாக வண்ணமாய் உன் அழகு முகம் இமையினுள் தெளிவாக தெரிகிறது!

காதல் நோயால் நிதமும் சாகிறேன் பெண்ணே,
மருந்து உன்னிடம்
எப்போது தருவாய் உன்னை என்னிடம்?
என் இரவையும், பகலையும் இணைத்த உன் ஞாபகம்
என் உயிரையும், உடலையும் பிரிக்கலாமா?

பெண்ணே உன் பிரிவு

பெண்ணே உன் பிரிவின் துயரம் தாயைத் தொலைத்த குழந்தைக்கு மட்டுமே தெரியும்!

எங்கே நீ இருக்கிறாய் என என் கால்கள் தண்ணீரைத் தேடி பரவும் கருவேலி முள்ளின் வேர்போல பாயும்!

கண்ணே உன்னை காண எந்த கிரகங்கள் நோக்கியும் பயணிக்கத் தயார்!
நீயே எனக்கு இரண்டாம் தாயார்.
இரண்டையும் பிரிக்க அந்த கடவுள் எனக்கு யார்?

சொர்க்கத்தில் இருந்தாலும் நீ என் பக்கத்தில் இருப்பதாய் உணர்கிறேன்.
நீ வெக்கத்தில் சிவந்தாலும் என்னாச்சோ என பதறுகிறேன்.

உன்னுடன் நான் பேசுவது தெரியாமல், பக்கத்தில் இருப்பவர்கள் காற்றில் என்ன தனியே பேசுகிறாய் என கேட்க பாவம் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று எண்ணி சிரிக்கிறேன்....
ஆம் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று எண்ணி சிரிக்கிறேன்...!!!

~surece~