வெள்ளி, 25 அக்டோபர், 2019

மறந்து போ என் மனமே

தாமரை மேலே நழுவிடும் தண்ணீர்
என் கன்னங்கள் மேலே தவழ்ந்திடும் கண்ணீர்
இரண்டின் சோகம் யாருக்கு தெரியும்.

காணல் நீர் போலே வந்தாய்
காலை மழைபோலே சென்றாய்
அன்பின் சுகமும் நீயே தந்தாய்
பிரிவின் வலியும் நீயே தந்தாய்

நாளும் கரையல உன்னால
நானும் கரையுறேன் உன்னால
நீயும் மயக்குன அன்பால
நானும் தவிக்குறேன் உன்னால

எனக்கென நீதான் வேணும்
எனக் கேட்குது முட்டாள் மனது
எப்படி சொல்லி தேற்றுவேன்
உன்னை நினைக்கா வண்ணம் மாற்றுவேன்.

சனி, 19 அக்டோபர், 2019

பேதை மனதின் புலம்பல்

அவள் சொன்ன சொல்லை
தண்ணீரிலே எழுதி வைத்தேன்.
பலன் தினம் கண்ணீரிலே தீக்குளித்தேன்.

கல்நெஞ்சக்காரி அவள்
பொய்பேச்சுக்காரி அவள்

யாவும் உண்மையென
கருத்ததெல்லமாம் தண்ணீர்
வெளுத்ததெல்லாம்
பாலென நான் இருந்தேன்.

அவள் கள் எனத் தெரியாமல்
நாளும் பருகிவிட்டேன்.
அவளுக்கே அடிமையானேன்.
போதையில் பேதையானேன்.

நாள்தோறும் நீ வேணும்
என கேட்கும் வேளையில்
முடியாது என்றே விலகிவிட்டாள்.

மீளவும் வழியில்லை
வாழவும் வழியில்லை.

மயங்கிய என் உள்ளம்
மாய்ந்தால் போதும்.

வியாழன், 17 அக்டோபர், 2019

நெஞ்சுக்குள் வலி

நீ
விரும்பியதை வாங்கி கொடுத்தேன்
விரும்பாததை அறவே தவிர்த்தேன்
இன்று என்னையே நீ விரும்பவில்லை
எனும்போது என் செய்வேன்.
மருகுகிறேன் மாய்ந்து போக.

தவிக்கும் நெஞ்சம்

நான் இருக்க நினைப்பதோ
உன்னை நினைப்பதற்காக.
நான் இறக்க நினைப்பதோ
உன்னை மறப்பதற்காக.
இருக்கவும் முடியாமல்
இறக்கவும் முடியாமல்
இடையில் தவிக்கிறேன் ஏனோ?

P.சுரேஷ் குமார்

புதன், 9 அக்டோபர், 2019

உயிரே எனை பிரியாதே

அன்பு ஒருநாள் அனாதையாக்கும்
பாசம் ஒருநாள் பைத்தியமாக்கும்.

இதுவரை உனக்கு நிஜமாய் இருக்கிறேன்.
இறந்தாலும் உன் நிழலாய் பின் தொடர்வேன்.

பச்சை இலையாய் நான் இருந்தேன்.
என்னை எச்சில் இலையாக்கி ஏன் எறிந்தாய்.

அன்பு மட்டுமே கொடுத்தேன்.
என் தெம்பு முழுவதையும் எடுத்தாய்.

காசு பார்த்தா என்னை காதலித்தாய்?
சாதி பார்த்தா என்னுள் சங்கமித்தாய்?
பாசம் எல்லாம் பொய்யா?
வேஷம் மட்டுமே மெய்யா?

காலம் முழுவதும் உன் காலடியில் நாயாக கிடக்க நான் தவித்தேன்.
என்னை எட்டி உதைத்து எறிந்துவிட்டாய்.

சோத்துல வெஷத்த வச்சதுபோல்
நீ பாசத்துல வேஷத்த வச்சிபுட்ட.

கால சுத்துன பாம்பில்லடி நான்
பாவி உன்னையே சுத்துன பைத்தியமடி நான்.

நான் மேல விட்ட காத்தாடி
இப்போ நூலறுந்து தவிக்கிறேன்டி.

என்னோடு நீ வந்தா
கடல் மீன வறுத்து தருவேன்.
என்னை விட்டு நீ போனா
கடல் மீனுக்கு இரையாவேன்.

உசுரும் பாராமாச்சி
உடம்பும் தக்கையாச்சி
உள்ளமும் நெருப்பாச்சி
குருதி வெண்ணீராச்சி.

உன் கல்லு மனச நான் கரைக்க என் கண்ணீரும் போதலையே.

கண்களும் நீரின்றி வறண்டு போச்சி
என் வாழ்க்கையும் நீயின்றி இருண்டு போச்சி.

முன்னாடியே சொல்லிருந்தா
உன் பின்னாடியே வந்திருக்க மாட்டேன்.

நடுக்கடலில் என்னை கவிழ்த்துவிட்டு
நீ மட்டும் கரைசேர்ந்து விட்டாய்.

உன்பேச்சு மட்டுமே கேட்ட என்னை
சொல்பேச்சு கேட்டு உதறிவிட்டாய்.

என் கத்தலும் கதறலும்
உன் காதுக்கு கேட்காம
நீ காதுல பஞ்சு வச்சி அடச்சிருக்க.
மூக்குல பஞ்சு வச்சி நான் போன பின்னே என்ன பண்ண நெனச்சிருக்க?

எது உண்மை எது பொய் என
விளங்காமலே விடைபெற நேரிடுமோ?
காலமும் என்னை ஏமாளி என்றே கூறிடுமோ?

இதுநாள்வரை
உன் பொய்யான அன்பில் நான் மிதந்தேன்.
உன் பொய் வேஷம் களைய நான் கண்ணீரில் மூழ்கினேன்.

ஒரு துளி அன்பேனும் உனக்கு
என்மேல் இருந்திருந்தால் அது உன்னை என்னில் ஒட்ட வைத்திருக்கும்.
ஒரு துளி அன்பை தேடாமல்
நீ ஓராயிரம் காரணம் தேடிவிட்டாய்.

நான் சேர்ந்து வாழ
காலம் எதிர்நோக்கி
காத்திருந்த நேரம்,
நீ என்னை பிரிந்து போக
திட்டம் தீட்டிவிட்டாய்.

காதலிலும் அரசியல் கண்டேன்
உன் பொய்யான வாக்குறுதியால்.

என் நெஞ்சத்தில்
கூடொன்று கட்டிவைத்தேன்.
அதில் குயிலாய்
உன்னை அடைகாத்தேன்.
நீ கூட்டை விட்டு பறந்து விட்டாய்.
என் மெய்யன்பு மறந்து விட்டாய்.

நீ மட்டும் பறந்து விட்டாய் உன் நினைவுகளை விட்டு விட்டு.
என் நெஞ்சம் தீயில் எரிந்தாலும் உன்
நினைவுகள் ஒரு நாளும் அழியாது.

உன்னை நகலாக்க யாருமில்லை
என் இரவை பகலாக்க நீயுமில்லை.

எப்போதும் என்னை நினைத்த உனக்கு
இன்று ஒரு நொடி கூட இல்லையா என் நிலைமையை நினைக்க.

உன் பேரை உடம்பில்
பச்சையாக நான் குத்தவில்லை எனினும்
என் இதயத்தில நீ இருப்பது உனக்கு ஏனோ புரியவில்லை

இரண்டாக உடையலாம் என் இதயம்.
அன்று ஆகலாம் உன் உருவம் உதயம்.

SS