வியாழன், 5 செப்டம்பர், 2019

அனுபவமே போதும் போதும்

தன் எழுச்சியில் மகிழ்ச்சி காண்பவன் மனிதன், பிறர் வீழ்ச்சியில் சுகம் காண்பவன் கயவன்.
யார்க்கும் நன்றே நினைப்பினும் எல்லாம் தீதே திரும்பி வர, வஞ்சத்தில் வீழ்ந்தும் நம்பிக்கையெனும் எச்சத்தில் வாழ்ந்தேன்.
தோல்வியும், ஏமாற்றமும் எப்போதும் என்னோடு பழகிவிட்டதாலோ என்னவோ இவையிரண்டும் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

காசு பணத்தின் தேவை கழுத்தை நெறித்தாலும் மனதே வீழாதே, உடலே வீழட்டும்.

போகும் பாதை நேரானால் முட்களைப் பற்றி கவலையில்லை.
வாழும் வாழ்வு நேர்மையானால் துன்பத்தை பற்றி கவலையில்லை.

உள்ளத்தின் வலிமை உலகத்தையே வெல்லும்.
உள்ளுக்குள் பயந்தால் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்.

திருத்த முடியாத தவறுகளுக்கு வருந்தி பலனில்லை.

தமிழே நீ வாழும் வரை என் தன்மானத் திமிர் வாழட்டும்.

எதற்கும் அனுபவமும், திறமையும் தகுதி என
நீங்கள் கருதுபவராயின் நான் உங்கள் நண்பன்.
தகுதியின்மையே மிகப்பெரிய தகுதி எனக் கருதினால் நிச்சயம் நான் உங்கள் பகைவன் தான்.

எதிரி உங்கள் முன்னின்று வாளை வீசுவான்.
துரோகி உங்களுடன் கூட நின்று குழிபறிப்பான்.

பட்டம் பயின்றும் பெற முடியாத வாழ்க்கைப்பாடம் யாவும் புகட்டிய துரோகாசான்களுக்கு
புன்னகையுடன் நன்றிகள் பல நான் உரைப்பேன்.

அனுபவமே ஆசான் என்பர் இன்னும்
எத்தனை Ph.D பெற்றுத்தர காத்திருக்கிறதோ என் அனுபவம்.

அனுபவமே போதும் போதும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக