சனி, 23 நவம்பர், 2019

உயிரே எனை பிரியாதே....

நீ என்னைப் பிரிந்தால்
கனநேரம் கூட யுகமாகிப் போகும்.
யுகம் முழுதும் நீதான் என்கூட வேணும்.
கால் ரெண்டும் உன்னை நிற்காமல் தேடும்.
கண் ரெண்டும் உன்னை சொக்காமல் பார்க்கும்.
கண்மீது வழியும் கண்ணீரும் இங்கே
உன்னை பார்த்துவிட்டால் காணல் போல் மறையும்.

P.சுரேஷ் குமார்

புதன், 20 நவம்பர், 2019

சைக்கோ Movie பாடல் - உன்ன நெனச்சி நெனச்சி பாடல் வரிகள்

படம் : சைக்கோ(2019)
பாடல் : கபிலன்
இசை : இசைஞானி இளையராஜா
இயக்குனர் : மிஷ்கின்

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...

யாரோ அவளோ
எனைத் தீண்டும் காற்றின் விரலோ...
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ...

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...

வாசம், ஓசை இவைதானே எந்தன் உறவே
உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே.

கண்ணே உன்னால் என்னைக் கண்டேன்
கண்கள் மூடி காதல் கொண்டேன்...

பார்வை போனாலும் பாதை  நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவுமில்லை...

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...

ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ...
உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ...

காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும் காதல் நீதானே...

நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன்...

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...

யாரோ அவளோ
எனைத் தீண்டும் காற்றின் விரலோ?...
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ?...

உன்ன நெனச்சி நெனச்சி உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு பறந்து போனா அழகா...

SureSh

செவ்வாய், 5 நவம்பர், 2019

நதியைத் தேடும் கடல்

இதயத்தில் சுமை இயல்பு
இதயமே சுமையானது யார் பொறுப்பு.
அவளே சரணம் என இருந்தேன்.
அவளன்றி மரணம் மட்டுமே என யார் போதித்தது
ஆனந்த கண்ணீர் என்ற வாய்ப்பே இல்லாமல் போனது
எப்போதும் சுடும் கண்ணீர் யார் தந்தது
நெஞ்சத்தில் அவள் நினைவை தைத்து
மஞ்சத்தில் அவளை வைக்க விரும்பினேன்.
வாழ்வே வரமென்று நான் இருந்தேன்.
சோகமே சுமையென்று யார் தந்தது.
காதல் அறியவைத்தாய்
என்னை உணரவைத்தாய்
உன்னோடு மட்டும் வாழ ஆசை தந்தாய்...

கடலின் அலையாய் தவிக்கிறேன்
நதியே என்னோடு வந்து கலந்துவிடு.
என் உப்புக் கண்ணீரை தித்திப்பாக்கி விடு.

P.சுரேஷ் குமார்