வியாழன், 21 மே, 2015

காணும் தெய்வம் அம்மா

காணும் தெய்வம் அம்மா...

நான் காணும் தெய்வம் நீதானம்மா
தாயைப்போல் தெய்வம் இங்கு ஏதம்மா?
உலகில் தாயின்றி யாரேனுமா
உயிரின்றி உடல்மட்டும் நடமாடுமா?
நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா?
உன் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உண்ணதம் நீயம்மா!
என் வாழ்வின் பொக்கிஷமும் நீயம்மா!
மரமாய் நானிருந்தால் எனைத் தாங்கி வேராய் நீயிருப்பாய்!
நான் வாழ நீ நோன்பிருப்பாய்!
அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் அம்மா நீ
உலகின் தலைசிறந்த கவிதையம்மா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலுமே
தாய்போல் மகனுக்கு இங்கு யாரம்மா?
நான் பெறும் புகழெல்லாம் உனக்காகுமே
நீ பெறும் துயரெல்லாம் எனக்காகுமே!
நெஞ்சம் தீயில் எரிந்தாலுமே
உன் நினைவு என்றும் அழியாதம்மா!
மாண்டு மண்ணுக்குள் போனாலுமே
உனை மறந்துபோக மாட்டேனம்மா!!!

P.சுரேஷ் குமார்

புதன், 20 மே, 2015

கல்லகம் தேர் திருவிழா

" கோவில் குளந்தான் ஊருக்கு அழகு
கோவில் இல்லா ஊர நீ விலகு. "
என்னும் முன்னோரின் வாக்கிற்கு இணங்க ஏராளமான கோவில்களுடன் அமைந்த ஊர் தான் எங்கள் ஊர் கல்லகம்.

" எங்கள் ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா, இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா " அது மாதிரி எங்க ஊரு.
அப்டியாபட்ட எங்கள் ஊரில தேரு திருவிழா.
கல்லகம் மாரியம்மன் தேர் திருவிழா.

Kallagam Rockerz...